BGM BNS Banner

'ஒரு ரூவா கூட தரமுடியாது'...நஷ்ட ஈடு கேட்ட பாகிஸ்தானிற்கு பதிலடி!

Home > தமிழ் news
By |
'ஒரு ரூவா கூட தரமுடியாது'...நஷ்ட ஈடு கேட்ட பாகிஸ்தானிற்கு பதிலடி!

இருநாடுகளுக்கு இடையேயான போட்டிகளை இந்தியா புறக்கணித்ததற்கு எதிராக,பாகிஸ்தான் கேட்ட நஷ்டயீடு தொகையினை இந்தியா அளிக்க தேவையில்லை என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தெரிவித்துள்ளது.

 

கடந்த 2008ல் மும்பையில் நடந்த கோரமான தீவிரவாத தாக்குதலின் காரணமாக,இரு நாடுகளுக்கு இடையிலான போட்டிகளை பிசிசிஐ தொடர்ந்து புறக்கணித்து வந்தது.ஆனால் கிரிக்கெட் போட்டிகளை நடத்த வேண்டும் என  பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு பிசிசிஐயிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.ஒரு வழியாக பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்ற பிசிசிஐ,கடந்த டிசம்பர் 2012 - ஜனவரி 2013ல் 2 டி-20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இருநாட்டு கிரிக்கெட் தொடரை இந்தியாவில் பிசிசிஐ நடத்தியது.

 

அதன் பிறகு கடந்த 2014ல் இரு நாடுகளும்  பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் தொடர்ந்து நடக்க வேண்டும் என, இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுகள் 2015 மற்றும் 2017ல் ஒப்பந்தம் போடப்பட்டது.ஆனால் அந்த ஒப்பந்தம் போட்ட பின்பு தான் பிரச்னை பெரிதானது.அதன் பிறகு எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை மற்றும் பல்வேறு அரசியல் காரணங்களால் போட்டிகளை நடத்த மத்திய அரசு பிசிசிஐக்கு அனுமதி மறுத்தது.

 

இதனால் ஒப்பந்தத்தின்படி பிசிசிஐ நடந்து கொள்ளவில்லை எனக் கூறி ஐசிசியிடம்,பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முறையிட்டது.இதனால் 3 பேர் கொண்ட குழுவினை ஐசிசி அமைத்தது.அதோடு அந்த குழுவின் முடிவிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது எனவும் தெரிவித்திருந்தது.விசாரணை குழுவிடம் தங்களுக்கு கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் நஷ்டயீடு வேண்டும் என பாகிஸ்தான் தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில்,விசாரணையின் முடிவினை அறிவித்த ஐசிசி,பாகிஸ்தானின் கோரிக்கை நிராகரிக்கபடுவதாக அறிவித்திருக்கிறது. இதுதொடர்பாக ஐசிசி வெளியிட்ட அறிக்கையில், ‘மூன்று நாட்கள் விசாரணைக்கு பின் விசாரணைக்குழு தங்கள் அறிக்கையை சமர்பித்தது. அதில் பாகிஸ்தானின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

PAKISTAN, CRICKET, BCCI, ICC, BILATERAL CRICKET