பாகிஸ்தான் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் இன்னிங்கிஸில் 184 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல்-அவுட் ஆனது.

 

பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி, முகம்மது அப்பாஸ் அதிகபட்சமாக தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். போட்டியின்போது பாகிஸ்தான் வீரர்கள் சிலர் ஆப்பிள் வாட்சுகளை கைகளில் அணிந்து விளையாடினர்.

 

இந்த நிலையில் ஆப்பிள் நிறுவன வாட்சுகளை அணிந்து விளையாட, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் ஊழல் கவுன்சில் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

 

ஆப்பிள் வாட்சுகள் மூலம் தகவல்களைப் பெறவும், அனுப்பவும் முடியும் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

BY MANJULA | MAY 25, 2018 11:53 AM #APPLE #PAKISTAN #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS