அம்ருதாவின் காதல் அவரைத் தைரியமாக இருக்க வைக்கும்..

Home > தமிழ் news
By |
அம்ருதாவின் காதல் அவரைத் தைரியமாக இருக்க வைக்கும்..

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.2016-ம் ஆண்டு நடந்த இந்த ஆணவக்கொலை இந்தியாவையே உலுக்கியது. பொறியாளர் சங்கர் தாழ்த்தப்பட்ட பிரிவை சார்ந்தவர்  என்றும் கௌசல்யா உயர்வகுப்பை சார்ந்தவர் என்றும் கரணம் காட்டி, பொறியாளர்  சங்கர்,3 பேர் கொண்ட கூலி படையினரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.இறுதியில் இந்த கூலிப்படையை ஏவிய காரணத்துக்காக கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் மிரியாலகுடாவில் தமது மகள் அமிர்தவர்ஷினி,  தாழ்த்தப்பட்ட  வகுப்பை சேர்ந்த பிரனாய் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டதால், தந்தை மாருதிராவ் கூலிப்படையை ஏவி மகளின் காதல் கணவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இந்தநிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கௌசல்யா,''அம்ருதாவிற்கு  ஏற்பட்டிருக்கும் வலி என்பது  சிறிய வலி இல்லை.அது எவ்வளவு கடினமான ஒன்று என்பதை உணர்ந்தவள் நான். எவ்வளவு ஆறுதல் கூறினாலும் அதை மனம் ஏற்றுக் கொள்ளாது. ஆனால், அவர் கண்டிப்பாக அதிலிருந்து மீண்டு வர வேண்டும்.விரைவாக அவர் அந்த வலியிலிருந்து மீண்டு வருவார் என நான் நிச்சயமாக நம்புகிறேன்.

 

மேலும்,"அம்ருதாவின் காதல் அவரை தைரியமாக இருக்க வைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.சங்கர் மேல் நான் வைத்திருந்த காதல்தான் களத்தில் இறங்கி போராடுவதற்கு எனக்கு பெரிய தைரியத்தைக்  கொடுத்தது. பிரனாய்க்கு நீதி கிடைக்க அவர் போராடவும், சாதியை எதிர்த்து நிற்பேன் என்று கூறியதற்கும் அவருக்கு நாங்கள் நிச்சயமாக துணை நிற்போம்,''என தெரிவித்துள்ளார்.

JUSTICEFORPRANAY