'அதை நிரூபிச்சா, பாஜகவில் சேர்ந்து மோசமான தண்டனைய அனுபவிக்கிறேன்’..உதய்நிதி!

Home > தமிழ் news
By |

திமுக-வின் அதிகாரப்பூர்வமான பொருளாளராக, தான் ஆகியிருப்பதை  நிரூபித்தால், அதற்கு தண்டனையாக ‘நான் பாஜகவில் இணைந்துவிடுகிறேன்’ என்று  உதய்நிதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

'அதை நிரூபிச்சா, பாஜகவில் சேர்ந்து மோசமான தண்டனைய அனுபவிக்கிறேன்’..உதய்நிதி!

காங்கிரஸின் அடுத்த அஸ்திரமாக பிரியங்கா காந்தி அக்கட்சியினரால் தீவிரமாக அரசியல் களத்தில் இறக்கிவிடப்படுவதைப் பற்றிய விவாதம் நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் போன்ற ஒரு தேசிய ஜனநாயக கட்சியில் நேருவைத் தொடர்ந்து இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகிய தலைவர்களுக்கு அடுத்தபடியாக ராகுல்காந்தி பொறுப்பேற்றிருந்தார்.

இந்த சமயத்தில்தான் பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியினரால் மேலும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படுகிறார்.  இந்த நிலையில் பாஜகவின் தமிழ்நாடு மாநில இளைஞர் அணி துணை செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், குடும்ப ஆதிக்க அரசியல் நிலவும் கட்சிகளில் கட்சியின் கடைநிலையில் இருப்பவர்கள் யாரும் கட்சியின் தலைமையை கைப்பற்றுவதற்கான வாய்ப்பில்லை என்றும் தமிழகத்தின் திமுக மற்றும் இந்தியாவின் காங்கிரஸ் கட்சிகளுக்குள் இந்த சூழலை காணலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸில் நேரு தொடங்கி பிரியங்கா காந்தி வரை நீடிக்கும் குடும்ப ஆதிக்க அரசியல் போல, திமுகவிலும் கலைஞர் கருணாநிதி தொடங்கி உதய்நிதி திமுகவின் பொருளாளர் ஆனது வரையிலும் நீடிக்கிறது, இவ்வளவு ஏன் அடுத்து உதய்நிதியின் மகன் இன்பநிதி வரை நீடிக்கும் என்று சூர்யா குறிப்பிட்டுள்ளார்.  கட்சியின் மற்ற பிரதிநிதிகள் வேண்டுமானால் எம்எல்ஏ அல்லது எம்பி ஆகலாமே தவிர தலைமையை கைப்பற்றி கட்சியை வழிநடத்தமுடியாது என்று கூறியவர், ஆனால் தமிழிசையோ, நிர்மலா சீதாராமனோ அவ்வாறு இல்லை, நீங்கள் ஒப்பிட்டு பாருங்கள் என்று கூறியுள்ளார்.

சூர்யாவுக்கு பதில் கொடுத்துள்ள நடிகரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதய்நிதி ஸ்டாலின், ‘நான் திமுக-வின் அதிகாரப்பூர்வமான பொருளாளராக, ஆகியிருப்பதை  உங்களால் நிரூபிக்க முடிந்தால், அதற்கு தண்டனையாக நான் பாஜகவில் இணைந்துவிடுகிறேன்..அதைவிட ஒரு மோசமான தண்டனை இல்லை’ என்று சர்காஸ்டிக் ட்வீட் போட்டுள்ளார்.

DMK, BJP, TAMILISAISOUNDARARAJAN, UDHAYNITHISTALIN, SGSURYAH