ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 2-வதாக பேட்டிங் செய்த இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 8 விக்கெட்டுக்கு 114 ரன்கள் என்று ஊசலாடியது. ஆனால் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் தனி வீரராக 110 ரன்களைக் குவித்து 48.3 ஓவர்களில் இலக்கை எட்ட வைத்தார்.

 

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி குறித்து ஜோஸ் பட்லர் கூறுகையில் "விக்கெட்டுகள் மளமளவென சரிந்ததால் நான் பொறுமையை கடைபிடிக்க வேண்டி இருந்தது. நெருக்கடியை தணிக்க முயற்சித்தேன். அப்போது இதுபோல சூழ்நிலையில் தோனி எந்த மாதிரி சமாளிப்பார் என்பதை கற்பனை செய்து பார்த்தேன். அவர் போலவே பதற்றத்தை வெளிக்காட்டாமல் ஆடினேன்,''என்றார்.

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை,இங்கிலாந்து 5-0 எனக் கைப்பற்றியது. இந்த போட்டியின் முடிவுகளால் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தரவரிசையில் ஆஸ்திரேலியா 6-வது இடத்திற்கு சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | JUN 26, 2018 2:03 PM #MSDHONI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS