'ஒருநாள் அனைத்தும் முடிவுக்கு வரும்'.. முதன்முறையாக மனந்திறந்த ரக்ஷித் ஷெட்டி!

Home > தமிழ் news
By |
'ஒருநாள் அனைத்தும் முடிவுக்கு வரும்'.. முதன்முறையாக மனந்திறந்த ரக்ஷித் ஷெட்டி!

சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த 'கீதா கோவிந்தம்' படத்தில்  ஹீரோயினாக நடித்த ராஷ்மிகா தனது திருமணத்தை நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகின. கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி-ராஷ்மிகா இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் திருமணம் நின்று போனதாக கூறப்பட்டது.இதற்கு ராஷ்மிகாவின் அம்மாவும் விளக்கமளித்திருந்தார்.

 

இந்தநிலையில் இதுகுறித்து நடிகர் ரக்ஷித் ஷெட்டி முதன்முறையாக விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், ''நான் சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருக்கப்போவதாக அறிவித்தேன். ஆனால் சில காரணங்களால் நான் மீண்டும் இங்கு வந்துள்ளேன். உங்கள் அனைவருக்கும் ராஷ்மிகா குறித்து ஒரு கருத்து உள்ளது. அதற்காக நான் யாரையும் தவறு சொல்ல மாட்டேன்.

 

உங்கள் அனைவரையும் விட எனக்கு அவளைப்பற்றி நன்றாகத் தெரியும். கடந்த 2 வருடங்களாக அவளைப்பற்றி நான் அறிவேன். அவளை மதிப்பிடுவதை முதலில் நிறுத்துங்கள்.அவளை அமைதியாக இருக்க விடுங்கள். ஒருநாள் அனைத்தும் முடிவுக்கு வரும், அப்போது இதுகுறித்த உண்மை உங்களுக்குத் தெரியவரும்.

 

என்னிடமோ,ராஷ்மிகாவிடமோ இதுவரை எந்த ஊடகங்களும் முதல் தகவல் எதையும் பெறவில்லை.அவர்கள் தேவைக்காக செய்திகளை உருவாக்குகிறார்கள். இந்த செய்தியை அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்காக,இன்னும் சில நாட்களுக்கு இந்த பேஸ்புக் பக்கம் ஆக்டிவாக இருக்கும்.தற்பொழுது நான் எனது வேலையில் கவனம் செலுத்த விரும்புகிறேன்,'' என தெரிவித்துள்ளார்.

 

GEETHAGOVINDAM, RAKSHITSHETTY, RASHMIKAMANDANNA