'யாருடைய உதவியும் தேவையில்லை'.. மீன் விற்கும் மாணவி குமுறல்!
Home > தமிழ் newsயாருடைய உதவியும் எனக்கு தேவையில்லை. என்னை நிம்மதியாக இருக்க விடுங்கள் என, கேரளாவைச் சேர்ந்த மீன் விற்கும் மாணவி ஹனன் தெரிவித்திருக்கிறார்.
கேரளாவை சேர்ந்த ஹனன் என்னும் மாணவி தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். தனது குடும்பம் மற்றும் படிப்பு போன்ற தேவைகளுக்காக மீன் விற்கும் தொழிலையும் அவர் பகுதி நேரமாக செய்து வருகிறார். இதுகுறித்து அண்மையில் மாத்ரூபூமி என்னும் நாளிதழில் சிறப்புக்கட்டுரை வெளியானது.
இது பலரது பாராட்டைப் பெற்றாலும், ஒருசிலர் இது போலி இந்த செய்தியில் உண்மையில்லை என்று சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தனர்.
இதற்கு மத்திய மந்திரி அல்போன்ஸ் கண்ணந்தனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில்,'' கடினமான வாழ்க்கைக்கு எதிராக போராடிவரும் ஹனனை தூற்றுவதை நிறுத்துங்கள்,'' என்று பதிவிட்டுள்ளார்.
இந்தநிலையில் எனக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை என மாணவி ஹனன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், " நான் இவ்வாறு செய்வது பட விளம்பரங்களுக்காக என்று என்மீது தவறான குற்றஞ்சாட்டுகின்றனர். உங்களிடம் இருந்து எனக்கு எந்த உதவியும் தேவையில்லை. படிப்பைத் தொடர்வதுடன், குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பதுதான் எனது முக்கிய நோக்கம்,'' என தெரிவித்துள்ளார்.