அனைத்து 'பைக்குகளிலும்' ஒரே நேரத்தில் சவாரி செய்ய முடியாது: தோனி

அனைத்து பைக்குகள், கார்களிலும் ஒரே நேரத்தில் சவாரி செய்ய முடியாது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.


ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

 

என் வீட்டில் நிறைய கார்களும், பைக்குகளும் உள்ளன. ஆனால் ஒரே நேரத்தில் அனைத்திலும் என்னால் பயணிக்க முடியாது. ஒரு அணியில் 6-7 பவுலர்கள் இருக்கும் போது நிலைமைகள் என்ன, யார் பேட்டிங் செய்கிறார்கள், அந்த நேரத்தில் தேவைப்படுவது என்ன? இவற்றை நான் அணியின் சிறந்த நலன்களுக்காகப் பார்த்தே பந்து வீச்சு அளிக்கிறேன்.

 

சூழ்நிலைகளுக்கு ஏற்ப யார் அந்தத் தருணத்தில் பேட்ஸ்மெனை வீழ்த்த முடியும் என்று நான் கருதுகிறேனோ அவர்களுக்கு பவுலிங் கொடுக்கிறேன். உதாரணமாக கடந்த போட்டியில் ஹர்பஜன் சிங்கை கொண்டு வரும் தேவை இருந்ததாக நான் கருதவில்லை. ஆனால் எந்த ஒரு வடிவத்திலும் ஹர்பஜன் ஒரு அனுபவஸ்தர்தான்.


இவ்வாறு தோனி தெரிவித்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS