எனது இடத்தை இந்திய அணியில் உள்ள ஒரு சாதாரண வீரரிடம் இழக்கவில்லை, தோனியிடம் தான் இழந்தேன் என கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

 

கடைசியாக 2010-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய தினேஷ் கார்த்திக்கிற்கு,அதன்பிறகு இந்திய டெஸ்ட் போட்டிகளில் விளையாட இடம் கிடைக்கவில்லை. தற்போது ஆப்கானிஸ்தானிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விருத்திமான் சஹா காயம் அடைந்ததைத் தொடர்ந்து,அவருக்குப்பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பெற்றுள்ளார்.

 

இந்தநிலையில், 8 ஆண்டுகளுக்குப்பின் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இடம் கிடைத்தது பற்றி, தினேஷ் கார்த்திக் உருக்கத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

 

நான் சரியாக விளையாடாத காரணத்தால்தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் இருந்தேன். இந்திய கிரிக்கெட் அணி தற்போது கடும் போட்டி நிறைந்து காணப்படுகிறது.குறிப்பாக தோனி எனக்கு கடும் போட்டியாளராகவே இருந்தார்.இந்தியக் கிரிக்கெட்டில் எனக்கென இருந்த இடத்தை நான் ஒரு சாதாரண வீரரிடம் இழக்கவில்லை,தோனியிடம் தான் இழந்தேன்.

 

எனது திறமையை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் போனதால் தான், இந்திய அணியில் எனது இடத்தைத் தக்க வைக்க முடியவில்லை. இதனை நான் நேர்மையாக ஒப்புக்கொள்கிறேன்.என்னுடைய கடினமான காலத்தில் எனக்கு ஊக்கம் அளித்து, ஆதரவாகத் தமிழக ரஞ்சி அணி இருந்தது. இதற்காக நான் கடன்பட்டிருக்கிறேன்.இன்று இந்திய அணிக்கு 8 ஆண்டுகள் கழித்து வந்துள்ளதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். 

 

இவ்வாறு தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS