வேலையில் இருந்து நீக்கியதால் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரியை(ஹெச்.ஆர்), இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

டெல்லியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரியாக தினேஷ் சர்மா என்பவர் பணியாற்றி வந்தார். இவரது அலுவலத்தில் பணிபுரிந்த ஜோகிந்தர் நடத்தை விதிகளை மீறியதற்காக அவரை பணியிலிருந்து தினேஷ் நீக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜோகிந்தர் என்னை வேலையிலிருந்து நீக்கியதற்கான பின்விளைவுகளை நீ சந்திக்க நேரிடும் என பலமுறை எச்சரித்துள்ளார்.

 

ஆனால் தினேஷ் இதுகுறித்து கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் சம்பவ தினத்தன்று தனது காரில் தினேஷ் சென்று கொண்டிருந்தபோது ஜோகிந்தர் வழிமறித்துள்ளார். ஆனால் தினேஷ் காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜோகிந்தர் தினேஷை கையில் வைத்திருந்த துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டுவிட்டு நண்பனுடன் பைக்கில் தப்பிச்சென்றுவிட்டார்.

 

இதில் படுகாயமடைந்த தினேஷை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி விட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் தப்பிச்சென்ற ஜோகிந்தர் மற்றும் அவனது கூட்டாளி இருவரையும் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

BY MANJULA | JUN 8, 2018 10:39 AM #DELHI #GUNSHOT #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS