'மீண்டும் திரும்பி வந்த பொன் மாணிக்கவேல்'...சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Home > தமிழ் newsஒரு வருடத்துக்கு சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்க பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
இன்றுடன் ஓய்வு பெற இருந்த பொன்.மாணிக்கவேலிற்கு நேற்று ரயில்வே காவல்துறையின் சார்பில் பிரிவு உபசாரவிழா நடைபெற்றது. சிலைக்கடத்தல் தடுப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக அடுத்த ஒரு வருடத்துக்குத் தொடரும் என்றும் உத்தரவிட்டது.
சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி, தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து, டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில் அது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிலைக் கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், இன்றுடன் பதவி ஓய்வு பெற இருந்த ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் சிலைக்கடத்தல் தடுப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக அடுத்த ஒரு வருடத்துக்குத் தொடரும் என்றும் உத்தரவிட்டது.
மேலும் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் பிரிவு பொன்.மாணிக்கவேல் தலைமையில் இயங்கும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தெரிவித்தார்.