இளைஞர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 R பைக்கின், எக்ஸ்-ஷோரூம் விலை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

முதல்கட்டமாக அஸ்ஸாம், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மேகாலயா, திரிபுரா, மிசோரம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 8 மாநிலங்களுக்கான எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.88,000 என, ஹீரோ நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


200 சிசி எக்ஸ்ட்ரீம்  R பைக் அதிகபட்சமாக மணிக்கு 114 கிலோ மீட்டர் பயணிக்கும் என்றும், 0-60 கிலோமீட்டர் வேகத்தை அதிகரிக்க வெறும் 4.6 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.


கருப்பு+சில்வர்,கருப்பு+சிவப்பு,ஸ்போர்ட்ஸ் சிவப்பு, கிரே மற்றும் நீலம் ஆகிய 5 நிறங்களில் இந்த பைக் வடிவமைக்கப்பட்டு தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

BY MANJULA | JUL 6, 2018 11:52 AM #TVS #BIKE #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS