மழை குறித்து வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு!

Home > தமிழ் news
By |
மழை குறித்து வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு!

தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த  தாழ்வு நிலை வலுவடைந்து உள்ளதாக அதன் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் காற்றழுத்தத் தாழ்வு நிலை இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வருவதாகவும் இதனால் இன்று தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.நாளை குமரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் 8-ஆம் தேதி குமரிக் கடல் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

தமிழகம் புதுவையில் பரவலாக மேகமூட்டம் காணப்படும் என்றும் பரவலாக லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கடலோர தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் மேகமூட்டம் காணப்படும் என்றும் பரவலாக லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது