குமரியில் கனமழை..மீட்பு பணியில் மக்களுடன் மக்களாக களம் இறங்கிய ஐஏஎஸ் அதிகாரி !
Home > தமிழ் newsகுமரி மாவட்டத்தில் கடுமையான மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தின் அனைத்து அணைகளும் அதன் முழு கொள்ளளவை எட்டிவிட்டது.இதனால் ஆறுகளில் வெள்ளம் அபாய அளவை தாண்டி செல்கிறது.
மாவட்டத்தின் வயக்கல்லூர், பார்வதிபுறம் , திக்குறிச்சி, ஆதங்கோடு, மாராயபுரம் ஆகிய இடங்கள் வெள்ள நீரில் தத்தளிக்கிறது. தாமிரபரணி ஆற்றில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடி, ஊருக்குள் புகுந்தது. இதனால் பாதிப்புக்குள்ளான பொதுமக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இரணியல் ரயில் நிலையம் அருகே நெய்யூரில் ரயில்வே தண்டவாளம் செல்லும் பகுதியில் நேற்று காலை நிலச்சரிவு ஏற்பட்டது.இதனால் ரயில் சேவை பதிக்கப்பட்டுள்ளது.மேலும் பலத்த மழை காரணமாக, நாகர்கோவில் - திருவனந்தபுரம் வழித்தடத்தில் நாளை காலை வரையிலும் அனைத்து இரயில்களும் ரத்து செய்யப் பட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் பளுகல் பகுதியில் ஆற்று நீர் புகுந்தது. மீட்பு பணிகளில் நேரடியாக களம் இறங்கிய பத்மநாபபுரம் சப்கலெக்டர் ராஜகோபால் சுங்கரா மக்களுடன் மக்களாக நின்று மீட்பு பணிகளை மேற்கொண்டார்.
பொதுவாக ஐஏஎஸ் அதிகாரிகள் பணிகளை மேற்பார்வை இடுவார்கள் ஆனால் பத்மநாபபுரம் சப்கலெக்டர் ராஜகோபால் சுங்கரா நேரடியாக களம் இறங்கி மீட்பு பணிகளில் ஈடுபட்டது மற்ற அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் அளித்தது.