'எய்ட்ஸ் நோயாளிகளை ஒதுக்கி வைத்தால்'...ரூபாய் 1 லட்சம் அபராதம்!
Home > தமிழ் newsமனிதர்களை தாக்கும் நோய்களில் மிகக்கொடியது எய்ட்ஸ்.அதிலும் கொடியது அந்த நோய் தாக்கியவர்களை ஒதுக்கி வைப்பது.பள்ளி கல்லுரி மற்றும் வேலை செய்யும் நிறுவனங்கள் மத்தியில் எய்ட்ஸ்யால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து பாகுபாடு காட்டப்படுகிறது.இதற்கு காரணம் அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் பழகும் போது நமக்கும் அந்த நோய் தாக்கிவிடுமோ என்ற அறியாமையே.இதனைத் தவிர்க்கும் வகையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், எய்ட்ஸ் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் புதிதாக இயற்றப்பட்டுள்ளது.
அதன்படி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் பாகுபாடு பார்ப்போருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை தர மறுப்பதும், பாதிக்கப்பட்டோரை நிறுவனங்களில் பணியில் இருந்து நீக்குவதும் குற்றம் என்றும் அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தச் சட்டம், கடந்த ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் கடந்த செப்டம்பர் 10ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.இந்தச் சட்டத்தின்படி வேலை, சிகிச்சை என எந்தவிதத்திலும் எய்ட்ஸ் நோயாளிகளிடம் பாகுபாடு காட்டப்படுவது குற்றம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், பால்வினை நோய் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவருக்கும், அவர்களை உதாசீனப்படுத்துவோருக்கும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.எய்ட்ஸ் நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக, இந்தச் சட்டம் ஒருவரின் உரிமையாகக் கருதப்படுவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.