இந்தியாவில் 328 அல்லோபதி மருந்துகளுக்கு தடை: ’எந்தெந்த மருந்துகள்’?
Home > தமிழ் newsமத்திய சுகாதார அமைச்சகம் 328 அல்லோபதி மருந்துகளுக்கு தடை விதித்துள்ள தகவல் மருத்துவ துறையில் அதிர்ச்சி அலையை உண்டுசெய்துள்ளது.
முன்னதாக 2016ல் மருந்து தொழில்நுட்ப ஆய்வுக்குழுவின் சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கையின்படி, 349 மருந்துகள் உட்கொள்ள தகுதி அற்றவை என்று தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த பட்டியலில் இருந்த ஃபார்மா நிறுவனங்கள் தொடுத்த மறுபரிசோதனை மனு, கோரிக்கை, வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்தது.
தற்போது மீண்டும் மத்திய அரசின் ஆணைப்படி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சாரிடான், தோல் பிரச்சனைகளுக்கான பாண்டோர்ம், லுபிடிக்ளாக்ஸ், உள்ளிட்ட மருந்து, மாத்திரைகளுக்கு தடை விதித்துள்ளது. அதே சமயம் டீகோல்ட் டோட்டல், கோரக்ஸ் உள்ளிட்ட மருந்துகள் தகுதியானவை என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
MEDICAL, INDIA, HEALTHMINISTRY, ALLOPATHY, 328MEDICINESBANNED, MEDICINES