'லாக்கரில் இவ்வளவு பணமா'?...'கட்டு கட்டாக சிக்கிய கோடிக்கணக்கான பணம்'!
Home > தமிழ் news
வருமானத்துறை நடத்திய அதிரடி ரெய்டில் 25 கோடி ரூபாய் அளவுக்கு ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தலைநகர் டெல்லியில்,சாந்தினி சவுக் பகுதியில் இந்த பணமானது கைப்பற்றப்பட்டதாக வருமானத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பரில், அமலாக்கத் துறை, ஹவாலா பணப் பதுக்கல் குறித்துத் தகவல் வந்ததையடுத்து, டெல்லி மற்றும் மும்பையில் பல இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டது. அப்போது 29 லட்ச ரூபாய் மதிப்புள்ள பணமும், பல முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்படன.இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த சோதனையானது,இந்த ஆண்டில் நடைபெற்ற 3வது லாக்கர் ஆபரேஷன் ஆகும்.
தலைநகர் டெல்லியின் சாந்தினி சவுக் பகுதியியில் உள்ள ரகசிய அறைகளில் இந்த சோதனையானது நடைபெற்றது.சோதனை நடைபெற்ற அறைகளில் 100கும் மேற்பட்ட ரகசிய லாக்கர்கள் இருந்ததாகவும் அதிலிருந்து 25கோடி ரூபாய் பணமானது கட்டு காட்டாக பறிமுதல் செய்யட்டுள்ளதாகவும் வருமானத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நடந்த விசாரணையில்,ஹவாலா தரகர்கள் இந்த பணத்தினை பதுக்கி வைத்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.மேலும் நேற்று தலைநகரின் பல இடங்களில்,ஒரே நேரத்தில் இந்த சோதனையானது நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.