'ராகுல், ஹா்திக் பாண்டியா விவகாரத்தில் அதிரடி திருப்பம்'...முக்கிய முடிவினை வெளியிட்ட பிசிசிஐ!

Home > தமிழ் news
By |

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து அவதூறாக கருத்து தொிவித்ததற்காக ஒழுங்கு நடவடிக்கையில் சிக்கிய  ஹா்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் மீதான தடையை நீக்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

'ராகுல், ஹா்திக் பாண்டியா விவகாரத்தில் அதிரடி திருப்பம்'...முக்கிய முடிவினை வெளியிட்ட பிசிசிஐ!

பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் `காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் பங்குபெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் ராகுல் மற்றும் ஹா்திக் பாண்டியா,பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய கருத்தை தொிவித்தனா்.இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதற்கு பல்வேறு பிரபலங்கள் தங்களின் கண்டனங்களை தெரிவித்தார்கள்.இது உலக அரங்கிலும் பெரும் விவாதத்தை கிளப்பியது.

இதனையடுத்து பாண்டியா மற்றும் ராகுல் ஆகியோரிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்டது.இருவரும் விளக்கம் அளித்த நிலையில்,அது போதுமானதாக இல்லை என இருவர் மீதும் நடவடிக்கை மேற்கொண்ட பிசிசிஐ,விசாரணை முடிவடையும் வரை இருவரும் விளையாட இடைக்கால தடை விதித்து கடந்த 11ம் தேதி பிசிசிஐ உத்தரவிட்டது.இந்நிலையில் இருவர் மீதும் விசாரணை நடத்துவது குறித்து கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில்,இருவரின் விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றது.மேலும் இந்த வழக்கில் வருகின்ற பிப்ரவரி 5ம் தேதி  விசாரணை தொடங்குகிறது.

இந்நிலையில் புதிய திருப்பமாக,இருவா் மீதும் விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்குவதாக பிசிசிஐ தொிவித்துள்ளது.மேலும் இருவர் மீதான விசாரணை தொடா்வதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

KLRAHUL, HARDIKPANDYA, CRICKET, BCCI, KOFFEE WITH KARAN