ஐபிஎல் 2018 டி-20 போட்டித் தொடர், வரும் ஏப்ரல் மாதம் மாதம் 7-ம் தேதி தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின், சென்னை அணி மீண்டும் இந்த ஐபிஎல் போட்டியில் விளையாடவிருப்பதால், ரசிகர்கள் மத்தியில் அந்த அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாளுக்குநாள் எகிற வைக்கின்றனர்.
இந்நிலையில், தன் ட்விட்டர் பக்கத்தில் தூய தமிழில் பதிவுகளை இட்டு வரும் ஹர்பஜன் சிங், சமீபத்தில் இரண்டு பதிவுகளை இட்டுள்ளார்.
அதில், "தமிழ்நாட்டுக்கு வருகை தந்த நாளில் இருந்து தமிழ் மக்கள் என் மேல் காட்டும் அளவு கடந்த பாசமும், நேசமும் என்னை வியக்கவைக்கிறது உங்கள் வீட்டு பிள்ளையாக என்னை ஏற்று கொண்டமைக்கு நன்றி. அன்பால் என்னை ஆட்கொண்ட தமிழ்நாடே .இந்த பந்தம் தொட்டு தொடரும் ஒரு பட்டு பாரம்பரியமாக தொடரட்டும்", என தெரிவித்துள்ளார்.
மேலும் இன்னொரு பதிவில், "நான் சரியானவன் அல்ல. சில நேரங்களில் முட்டாள் தனமான செய்திகளும் சொல்வது உண்டு. தேவை அற்ற நேரங்களில் சிரிப்பதும் உண்டு.சற்று வேடிக்கையானவன் தான் ஆனாலும் நிறம் மாறுவது இல்லை. என்னை விரும்பினாலும் வெறுத்தாலும் .நான் ஒரு சத்தியம் செய்கிறேன் நான் உங்களை விரும்புகிறேன். அருமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி", என தமிழ் மக்கள் மீதான தன் அன்பை வெளி காட்டியுள்ளார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Will Steve Smith still captain Rajasthan Royals?
- When Dhoni was caught unawares at Chepauk stadium
- ரசிகர்களுக்காக 'டான்ஸ்' ஆடிய 'சிஎஸ்கே' வீரர்கள்...வீடியோ உள்ளே!
- 'நான் வந்துட்டேன்னு சொல்லு'...தமிழில் ட்வீட்டிய 'பிரபல சிஎஸ்கே' வீரர்!
- என் இனிய நண்பனே 'இணைந்து கலக்குவோம்'.. சுரேஷ் ரெய்னா!
- 'சென்னை அணிக்கு விளையாடாதது வருத்தமே' சிஎஸ்கே வீரர்
- Watch: MS Dhoni having discussion with Srinivasan at Chepauk stadium
- CSK CEO reveals how Dhoni was convinced to pick Watson
- Top CSK player ruled out of IPL
- Top player suffers injury at gym ahead of IPL