இந்து-முஸ்லீம் விளையாட்டை நிறுத்துவோம் என, பிரபல இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங் தனது ட்விட்டர் பக்கத்தில்  காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

 

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று ரஷியாவில் நடைபெற்றது. இதில் பிரான்ஸ்-குரேஷியா அணிகள் மோதின.இந்தப் போட்டியில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரேஷியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

 

இதுகுறித்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், "50 லட்சம் மக்கள் தொகை கொண்ட சிறிய நாடான குரேஷியா உலகக்கோப்பை பைனலில் விளையாடுகிறது. 135 கோடி மக்களை கொண்ட நாம் இந்து - முஸ்லீம் விளையாட்டை  நிறுத்துவோம்,குரேஷியாவிடம் கற்றுகொள்வோம்,'' என இந்தியில் தெரிவித்துள்ளார். 

BY MANJULA | JUL 16, 2018 1:59 PM #HARBHAJANSINGH #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS