"உணர்ச்சி வேகத்தில் தவறாக பேசிவிட்டேன்"...நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட எச். ராஜா!

Home > தமிழ் news
By |
"உணர்ச்சி வேகத்தில் தவறாக பேசிவிட்டேன்"...நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட எச். ராஜா!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.இதனால் அவர் மீதான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

 

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தரக்குறைவாக பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி செல்வம், நிர்மல் குமார் அமர்வு, எச்.ராஜா நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். அதனை ஏற்று இன்று உயர் நீதிமன்றத்தில் ஆஜரான எச்.ராஜா,உணர்ச்சி வேகத்தில் காவல்துறையிடம் ,தவறாக பேசிவிட்டதாகவும் அதற்கு  நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும்  மனுத்தாக்கல் செய்தார்.இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்தனர்.