246 பேருக்கு மின்னஞ்சல் அனுப்பி ஒரு பெண்ணை தேடியவர்.. காத்திருந்த சர்ப்ரைஸ்!

Home > தமிழ் news
By |
246 பேருக்கு மின்னஞ்சல் அனுப்பி ஒரு பெண்ணை தேடியவர்.. காத்திருந்த சர்ப்ரைஸ்!

ஒரு பெண்ணை குருட்டுத் தனமாக தேடி அலைவதெல்லாம் 90களில் தமிழ் சினிமாக்களில் அரிதாக பார்க்க முடிகிற கதைகள். மாதவனின் ’ஜேஜே’ போன்ற படங்களிலும், காதலர் தினம் போன்ற படங்களிலும் இண்டர்நெட்டில் பார்த்த பெண்ணின்  முகவரியையும் முகத்தையும் தேடி இளைஞர்கள் அலைவார்கள். இதேபோல் கனடாவைச் சேர்ந்த ஒரு இளைஞர், உணவகத்தில் பார்த்த ஒரு அழகான பெண்ணை கண்டுபிடிக்க ஏறக்குறைய 246  பெண்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

கனடாவின், கல்காரி பல்கலைக்கழகத்தை (University of Calgary) கனடாவை சேர்ந்த மாணவர் ஒருவர், உணவகத்தில் ஒரு பெண்ணை பார்த்துவிட்டு, அவரை பிடித்துப்போக அவரிடம் செல்போன் எண்ணை கேட்டுள்ளார். அப்பொழுது, அந்த பெண் தவறான எண்ணை கொடுத்துவிட்டார். எனினும் அப்பெண்ணை கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த பெண்ணின் பெயர் கொண்ட 246 பேருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

 

அந்த மின்னஞ்சலில் ‘நாம் உணவகத்தில் பார்த்துக்கொண்டோம்.  உங்களிடம் தொலைபேசி எண்ணை நான் கேட்டபோது, நீங்கள் தவறான எண்ணை கொடுத்துவிட்டீர்கள்’ என்று தொடங்கி எழுதியுள்ளார்.  நிக்கோல் என்று தொடங்கும் அந்த பெண்ணின் பெயரை வைத்து 246 தோராயமான மின்னஞ்சல்களுக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அதை உண்மையில் அவர் தேடுகிற பெண்ணின் நண்பர் ஒருவர் அந்த பெண்ணிடம் காட்ட, உடனடியாக மின்னஞ்சலில் இருந்த தொடர்பு எண்ணைக் கொண்டு அந்த இளைஞருக்கு அந்த பெண் குறுந்தகவல் அனுப்பி, சில நாட்களில் அவரை சந்திக்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறார். வலைதளங்கள் மூலமாக தொடர்புகளைத் தக்க வைக்கவோ, நம் வட்டத்தில் இருப்பவர்கள் தொலைந்துபோனாலும் கண்டுபிடிக்கவே முடிகிறது என்பது தொழில்நுட்ப வளர்ச்சி நமக்களித்த வரம் என்று அந்த இளைஞர் இதுபற்றி கூறியுள்ளார்.

MAIL, TECHNOLOGY, SOCIALMEDIA, MENSEARCHESFORWOMEN