திருமண மேடையில் மின்னலைப் பார்த்து மணமகன் பயந்ததால், மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

2 நாட்களுக்கு முன் பீகார் மாநிலம் பாட்னாவில் ரேணு குமாரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது.அப்போது மணமேடையில் அமர்ந்து இருந்த மணமகன் மின்னலை பார்த்து விநோதமாக நடந்து கொண்டதால், ரேணு அவரை வேண்டாம் என்று கூறி திருமணத்தை நிறுத்தி விட்டார்.

 

இதனால் ஏற்பட்ட தகராறில், மணமகள் வீட்டை சேர்ந்த மூன்று பேரை மணமகன் தரப்பினர் தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரைத் தொடந்து அந்த மூவரும் கைது செய்யப்பட்டு தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

BY MANJULA | JUN 30, 2018 4:57 PM #MARRIAGE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS