'கல்லறையில் திருமணம்' செய்துகொண்ட காதலி.. கலங்க வைக்கும் புகைப்படங்கள்!
Home > தமிழ் newsஇறந்து போன காதலரின் கல்லறையில், அவரின் காதலி திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் காண்பவர் நெஞ்சை கலங்கச்செய்துள்ளது.
வட அமெரிக்காவை சேர்ந்த ஜெசிகா பாட்கெட் என்பவருக்கும் அவரது காதலரும், தீயணைப்பு வீரருமான கெண்டல் முர்பே என்பவருக்கும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.எதிர்பாராதவிதமாக கடந்த வருடம் நவம்பர் மாதம் கெண்டல் சாலை விபத்தில் மரணமடைந்தார்.
இந்தநிலையில் ஏற்கனவே நிச்சயம் செய்தபடி குறிப்பிட்ட தேதியில் ஜெசிகா தனது திருமண ஆடையை அணிந்து காதலரின் கல்லறைக்கு உறவினர்களுடனும், நண்பர்களுடனும் சென்றுள்ளார். அங்கு மலர்களை வைத்து தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளார்.
கெண்டல் உயிருடன் இருந்திருந்தால் எப்படி திருமணம் நடைபெற்றிருக்குமோ அதேபோல புகைப்படங்களை, லவ்விங் லைஃப் போடோகிராஃபி (Loving life Photography) என்ற நிறுவனம் புகைப்படமெடுத்துள்ளது.
சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்கள் காண்பவர்களின் கண்களில் தன்னையறியாமல், நீரை வரவழைக்கச் செய்வதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்...