பேஸ்புக், வாட்ஸ் ஆப்களில் வரும் பதிவுகளை ஃபார்வேடு பண்ண போறீங்களா? உஷார்!
Home > தமிழ் newsபேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள்தான் தற்போதைய தகவல் பரிமாற்றத்தின் உச்சபட்ச கருவிகளாக உள்ளன. எனினும் இவற்றின் வழியே தவறான- போலியான தகவல்கள் பரவுவதால் பலவகையான சிக்கல்கள் உண்டாவதோடு, பலரும் அவதிப்படுகின்றனர்.
ஆகவே, நாட்டின் பொது அமைதி, பாதுகாப்பு, அரசியல் இறையாண்மை போன்றவற்றில் குலைவு ஏற்படாமல் இருக்கவும், அதன் பொருட்டு தேவையற்ற வதந்திகளை கட்டுப்படுத்தவும் அவற்றை கண்காணித்து, போலி செய்திகள் வந்திருந்தால், அவற்றை நீக்குவதோடு, அவற்றை பதிவிடுபவர்கள் அல்லது உருவாக்குபவர்களின் கணக்குகளை முடக்கி, அவர்கள் மீது விசாரணை நடத்தி, தக்க நடவடிக்கை எடுப்பதென மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கென புதிய சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அவற்றை பற்றிய கருத்தும் கேட்டுள்ளது மத்திய அரசு. மேலும் விசாரணைகளுக்கு சமூக வலைதளங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட மத்திய அரசு, சம்மந்தப்பட்டவர்களின் விபரங்களை 180 நாட்கள் கால அவகாசம் எடுத்துக்கொண்டு கண்காணித்து பின், அவற்றை சேகரித்து வைக்கவும் உத்தரவிட்டுள்ளது.