செல்லாத பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொள்ள இவர்களுக்கு மட்டும் அனுமதி....மத்திய அரசு !

Home > தமிழ் news
By |
செல்லாத பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொள்ள இவர்களுக்கு மட்டும் அனுமதி....மத்திய அரசு !

கடந்த 2016 நவம்பர் மாதம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவித்தது.இதனால் மக்கள் தங்கள் வைத்திருந்த 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ள காலஅவகாசம் அளிக்கப்பட்டது.அதன்படி வங்கிகளில் தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்றி கொண்டனர்.

 

மத்திய அரசு அளித்த காலஅவகாசம் முடிந்த பிறகு 10க்கு மேற்பட்ட எண்ணிக்கையில் ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர்களுக்கு 10000 ரூபாய் அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தால் அமலாக்க பிரிவிற்கு இடையூறு ஏற்பட்டது.

 

அமலாக்க அதிகாரிகள் சோதனைக்கு செல்லும் பொது கைப்பற்றப்படும் பழைய செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.மேலும் வங்கியில் செலுத்தும் போதும் பல பிரச்சனைகள் எழுந்தன.

 

இந்நிலையில் மத்திய நேரடி வரிகள் வாரியம், மத்திய மறைமுக வரிகள் வாரியம், அமலாக்கத் துறை உள்ளிட்ட அரசு அமைப்புகள் பழைய ரூபாய் நோட்டுகளை வைத்துக் கொள்ள ஏதுவாக மத்திய அரசு சட்டத்தில் திருத்தங்களை செய்துள்ளது.

 

இதன் மூலம் சோதனையில் கைப்பற்றப்படும் பழைய 500,1000  ரூபாய் நோட்டுகளை கையாள்வதில் எந்த குழப்பமும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DEMONETIZATION