Looks like you've blocked notifications!

தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

செய்தியாளர்கள் சந்திப்பு முடிவடையும் தருவாயில், பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் ஆளுநரிடம் கேள்வியொன்றை எழுப்பினார். அதற்கு பதிலளிக்காமல் ஆளுநர் அந்த பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தை தட்டினார்.

 

தன்னுடைய கேள்விக்கு பதிலளிக்காமல் ஆளுநர் கன்னத்தை தட்டியது குறித்து, அந்த பெண் பத்திரிக்கையாளர் ட்விட்டரில் தனது  அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

 

ஆளுநரின் இந்த செயலுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

 

இந்த நிலையில் தனது செயலுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அந்த பத்திரிக்கையாளருக்கு ஆளுநர் அனுப்பியுள்ள விளக்கக் கடிதத்தில், "பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது, நீங்கள் எழுப்பிய கேள்வி சிறப்பாக இருந்தது. அதைப் பாராட்டும் விதமாக உங்களை என்னுடைய பேத்திபோல கருதியே கன்னத்தில் தட்டினேன்.

 

ஒரு செய்தியாளராக உங்களுடைய செயல்பாட்டைப் பாராட்டும் விதமாகவே நான் அவ்வாறு செய்தேன். உங்களுடைய கடிதத்தின்மூலம், என்னுடைய செயலால்  நீங்கள் அடைந்த கஷ்டத்தைப் புரிந்துகொண்டேன். உங்களுடைய உணர்வுகள் கஷ்டப்பட்டதைக் குறைக்கும் விதமாக, என்னுடைய மன்னிப்பை வெளிப்படுத்த விரும்புகிறேன்' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

BY MANJULA | APR 18, 2018 2:30 PM #NIRMALADEVI #BANWARILALPUROHIT #TAMILNADU #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS