இந்தியாவின் 72வது சுதந்திர தினத்தை கவுரவித்த கூகுள்!

Home > தமிழ் news
By |
இந்தியாவின் 72வது சுதந்திர தினத்தை கவுரவித்த கூகுள்!

உலகின் அனைத்து நாடுகளுக்கும் உகந்த வகையில், அனைத்து பயனாளர்களும் நெருக்கமாக உணரும் வகையில், நாளும் புதுமைகளை புகுத்தி வருகிறது கூகுள் நிறுவனம்.

 

அண்மையில் சீனா, உலக பிரவுசர்களை பயன்படுத்துவதில்லை என்ற செய்தியை கேட்ட பிறகு சீனாவிற்கு தகுந்த பிரத்தியேகமான கூகுள் தேடுதளத்தை வடிவமைத்துத் தர தயாராக இருப்பதாக கூகுளின் முதன்மை செயலாளர் சுந்தர் பிச்சை அறிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் இந்தியாவின் 72 ஆவது சுதந்திர தினமான இன்று இந்தியாவை கவுரவிக்கும் விதமாக புகழ்பெற்ற தேடுதல் வலைதளமான கூகுள், இந்திய சுதந்திர தினத்திற்கான புதிய நூல் ஒன்றை வடிவமைத்து வெளியிட்டுள்ளது. அந்த டூடுளில் இந்திய தேசிய பறவை மயில், இந்திய தேசிய விலங்கான புலி, இந்திய தேசியக் கொடி, இந்தியாவின் புனித விலங்காக புத்த மதத்தவர்களால் போற்றப்படும் யானை உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

 

பொதுவாக ஒவ்வொரு நாட்டின் குறிப்பிட்ட அடையாளங்களை  பிரதிபலிக்கும் விதமாகவும், அவற்றைக் கொண்டாடும் விதமாகவும் சிறப்பு பிம்பங்களை வடிவமைப்பது கூகுளின் ஸ்டைல். இதன் பெயரே டூடுள். அவ்வகையில் இந்திய சுதந்திர தினத்திற்கான டூடுள் படத்தை கூகுள் இன்று ஒருநாள் முழுவதும் தனது தேடுபொறியின் முகப்பில் வைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

INDEPENDENCEDAY2018, DOODLE