‘இனி பாஸ்வேர்டை ஹேக் செய்தால் அவ்ளோதான்’.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கூகுள்!
Home > தமிழ் newsஇணையத்தில் நமது பாஸ்வேர்டு ஹேக் செய்யப்பட்டால் உடனடியாக தகவல் அளிக்கும் வகையில், பாஸ்வேர்டு செக்அப் எக்ஸ்டென்ஷன் என்கிற புதிய தொழில் நுட்பத்தை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.
இணையமயமாகிய இன்றைய சூழலில் பலரது தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு வருகின்றன. இதில் வங்கிக்கணக்கு, இ-மெயில், சமூக வலைதளம் போன்ற பாஸ்வேர்டுகள் ஹேக் செய்யப்பட்டு தகவல்கள் திருடப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதில் ஆன்லைன் வர்த்தகம் செய்யும்போதுதான் வங்கி கணக்குகளின் பாஸ்வேர்டுகள் திருடப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இணையதளத்தைப் பயன்படுத்தும் பயனாளர்களின் பாஸ்வேர்டு ஹேக் செய்யப்பட்டால் உடனடியாக அதை பயனாளர்களுக்கு தெரிவிக்கும் வசதி ஒன்றை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் ஏற்கனவே ஹேக் செய்யப்பட்டுள்ள கோடிக்கணக்கான கணக்குகளில் நீங்கள் டைப் செய்யும் பாஸ்வேர்டு இருக்கிறதா என்று ஒப்பிட்டு பார்த்து, இருப்பதைக் கண்டுபிடித்தால் உடனடியாக உங்களது பாஸ்வேர்டை மாற்ற எச்சரிக்கை வரும். இப்படி செக் பண்ணும்போது இந்த செயல்பாட்டினை கூகுளால் கூட பார்க்க முடியாத அளவிற்கு பாதுகாப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூகுள் கூறியிருக்கிறது.
இதை பயன்படுத்தும் முறை மிகவும் எளிதானது தான், முதலில் கூகுள் க்ரோமின் வலது பக்கம் இருக்கும் more tools சென்று பின்னர் கீழே வரும் Extensions என்பதை கிளிக் செய்து ‘Password Checkup’ என டைப் செய்து தேடினால் அதில் பாஸ்வேர்டு செக்அப் எக்ஸ்டென்ஷன் என வந்த உடன் ‘Add to Chrome’ என கிளிக் செய்துவிட்டால் போதுமானது. இந்த வசதி இன்ன்ம் மேம்படுத்தப்படும் என்றும் கூகுளின் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.