Alaya BNS Banner
Kayamkulam Kochunni BNS Banner
Aan Devadhai BNS Banner

‘விக்கிற விலையில்’, ராயல் என்ஃபீல்டை தீயிலிட்டு கொளுத்தும் இளைஞர்!

Home > தமிழ் news
By |
‘விக்கிற விலையில்’, ராயல் என்ஃபீல்டை தீயிலிட்டு கொளுத்தும் இளைஞர்!

கோவாவில் இளைஞர் ஒருவர் தான் ஆசையாய் வாங்கிய ராயல் என்ஃபீல்டு பைக்கை தீயிட்டு கொளுத்தும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.வழக்குக்காக 7 ஆண்டுகள் அலைக்கழிக்கப்பட்ட  வெறுப்பால் தான் இந்த முடிவை எடுத்ததாக அந்த இளைஞர் கூறினார்.

 

கோவா மாநிலம்  சவன்த்வாடியை சேர்ந்தவர்  அன்வர் குரு.இவர் போலி ஆவணம் வைத்திருந்ததாக கூறி அவரது இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் 7 ஆண்டுகளுக்கு முன் பறிமுதல் செய்துள்ளனர்.ஆனால் தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும் தன்னுடைய ஆவணங்கள் அனைத்தும் சரியான முறையில் பெறப்பட்டவை எனவும் நீதிமன்றத்தில் அவரது தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தார்.

 

இந்நிலையில் அந்த வழக்கில் அன்வர் மீது குற்றம் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்ததை அடுத்து அவரது வாகனத்தை காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர். ஆனால் எனது பைக்கை உடனே என்னிடம் தரவில்லை எனவும் ,7 ஆண்டுகள் இழுத்தடிப்புக்குப் பின் தரப்பட்டதாகவும் அன்வர் தெரிவித்தார். இதனால் கடும் விரக்தியில் இருந்த அன்வர், தான் ஆசையாய் வாங்கிய பைக்கை தீயிட்டுக் கொளுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் பைக்கை தீயிட்டு கொளுத்தும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ROYAL ENFIELD THUNDERBIRD, GOA