அக்காவின் கல்யாணத்துக்கு தங்கை எடுத்த சாகச முடிவு!

Home > தமிழ் news
By |

மாரத்தானில் ஓடி அதில் வந்த பரிசு தொகையின் மூலம் தனது சகோதரியின் திருமணத்துக்கு உதவிய வீராங்கனையின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

அக்காவின் கல்யாணத்துக்கு தங்கை எடுத்த சாகச முடிவு!

மகாராஷ்ட்ரா மாநிலம் புல்டானா மாவட்டத்தில் உள்ள சக்வான் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயதான பூனம் சோனூன். இவரது தந்தை விவசாய தொழிலை மேற்கொள்ளும் ஒரு கூலி தொழிலாளி. தடகள வீராங்கனையான பூனம் சோனூன் தனது சகோதரிக்காக எடுத்த ஒரு முடிவு அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

பூனம் சோனூனின் மூத்த சகோதரிக்கு சமீபத்தில் திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளன. அதற்கு பணம் மிகப் பெரிய தடையாக இருந்துள்ளது. இதனால் பூனம் சோனூன், புனே மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு அதில் வரும் பரிசுத் தொகையை தனது சகோதரியின் திருமணத்திற்கு கொடுத்துவிடலாம் என முடிவு எடுத்துள்ளார்.

இதனால் பள்ளியின் அறிவுறுத்தலின் பேரில் விஜேந்திர சிங் என்பவரிடம் பயிர்ச்சிக்காக சேர்ந்துள்ளார். பயிர்ச்சிக்கு பூனம் சோனூன் பணம் இல்லாமல் தவிப்பதை அறிந்த பயிற்ச்சியாளர் விஜேந்திர சிங் ஒரு தொண்டு நிறுவனத்தின் மூலம் உதவி செய்து வந்துள்ளார்.

இதனை அடுத்து புனே மாரத்தானில் கலந்து கொண்ட பூனம் சோனூன் அதில்  வெற்றி பெற்றுள்ளார். இதில் அவருக்கு ரூ.1.25 லட்சம் பரிசு தொகை கிடைத்துள்ளது. இந்த பணத்தை அப்படியே தனது சகோதரியின் திருமணத்திற்கு பூனம் கொடுத்துள்ளார். மேலும் தெற்காசிய விளையாட்டு போட்டிகளுக்காக  நடைபெற்ற வீரர்கள் தேர்வில் பூனம் கலந்து கொண்டதால் அவரது சகோதரியின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாமல் போயுள்ளது.

பூனம் சோனூன் கடந்த 2018 -ம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய ஜூனியர் தடகளத்தில் 3,000 மீட்டர் ஓட்டப் பந்தையத்தில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

MAHARASHTRA, ATHLETE, SISTER, MARRIAGE, MARATHON