'மொத்த சொத்தையும் பிள்ளைகளுக்கு கொடுக்காதீங்க'...வீட்டு வாடகையே கொடுக்க கஷ்டப்படும்... ரேமண்ட்ஸ் நிறுவனர்!

Home > தமிழ் news
By |
'மொத்த சொத்தையும் பிள்ளைகளுக்கு கொடுக்காதீங்க'...வீட்டு வாடகையே கொடுக்க கஷ்டப்படும்... ரேமண்ட்ஸ் நிறுவனர்!

குடும்ப பிரச்சனை காரணமாக,ஒரு காலத்தில் பெரும் பணக்காரராக விளங்கிய ரேமண்ட்ஸ் நிறுவனர்,  தற்போது வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத பரிதாபத்தில் வாழ்ந்து வருகிறார்.

 

'ரேமண்ட்ஸ்-தி கம்ப்ளீட் மேன்' இந்த விளம்பரத்தை யாராலும் மறக்க முடியாது.கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைவராலும் அறிய பட்ட பிராண்டாக இன்று வரை நம்பர் 1' இடத்தில் இருக்கும் ரேமண்ட்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்தவர் விஜய்பட் சிங்கானியா.இவர் கடந்த 1925-ம் ஆண்டு சிறிய டெக்ஸ்டைல்ஸ் ஷோரூமாக ஆரம்பித்து இன்று உலகின் மிக முக்கியமான இடத்தை ரேமண்ட்ஸ் பிடிப்பதர்கு மிக முக்கியமான காரண கர்த்தா இவர்.இப்போது அவருக்கும் அவரின் மகனான கெளதம் ஹரி சிங்கானியாவிற்கும் இடையில் நடக்கும் சொத்து பிரச்சனை நீதிமன்றம் வரை வந்துள்ளது.

 

ரேமண்ட்ஸ் நிறுவனத்தை,வயது மூப்பின் காரணமாக தனது 78-வது வயதில், கடந்த 2015-ம் ஆண்டில் தனது மகனிடம் ஒப்படைக்கிறார் விஜய்பட் சிங்கானியா.தன் வசம் இருந்த 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள அவரது நிறுவனப் பங்குகள் அனைத்தையும் தனது ஒரே மகன் கெளதம் ஹரி சிங்கானியா வசம் ஒப்படைத்தார். தற்போது ரேமண்ட்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 6,000 கோடி ரூபாய் ஆகும்.

 

தந்தைக்கும்,மகனிற்கு நடக்கும் பிரச்சனைக்கு மாற்றமொரு காரணமாக விளங்குவது,தெற்கு மும்பையின் மலபார் ஹில் பகுதியில் உள்ள ஒரு குடும்பத்துக்குச் சொந்தமான ஜே.கே.ஹவுஸ் என்ற 36 மாடிக் கட்டிடம்.இந்த வீட்டில் சிங்கானியா குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குடும்பத்தினர் தனித்தனியாக வசித்துவந்தனர். இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக அந்த வீட்டிலிருந்து விஜய்பட் சிங்கானியா வெளியேற்றப்பட்டார்தற்போது அவர், 7 லட்சம் ரூபாய் மாத வாடகைக்கு ஒரு வீட்டில் வசித்துவருகிறார்.

 

ஆனால் ஒரு காலத்தில் பெரும் பணக்காரராக கொடி கட்டி பறந்த விஜய்பட்,தற்போது இருக்கும் வீட்டின் வாடகையை கூட கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார்.இது குறித்து அவர் கூறுகையில் 'பெற்றோர்கள் தங்களது சேமிப்பு முழுவதையும் பிள்ளைகளுக்கு கொடுப்பது தவறு என்பதை நிச்சயம் உணர வேண்டும்.அதற்கு நானே ஒரு சிறந்த உதாரணம்.எனது மகனுக்கு அனைத்து சொத்துக்களையும் அன்பளிப்பாக கொடுத்தது பெரும் தவறு.எனது மகனிடம் இந்த நிறுவனத்தின் பொறுப்பை ஒப்படைத்தது எனது முட்டாள்தனத்தின் உச்சம் என அவர் தெரிவித்தார்.

 

இந்நிலையில் தனது மகன் மீதே வழக்குத் தொடுத்த விஜய்பட், தனது வீட்டுக்கான வாடகையை ரேமண்ட்ஸ் நிறுவனம் செலுத்தவேண்டும் என்றும், ஜே.கே.ஹவுஸில் தனக்கும் உரிய உரிமை வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

GAUTAM SINGHANIA, VIJAYPAT SINGHANIA, RAYMOND GROUP