'மேட்ச்ச விடுங்க நெஜத்துல நீங்கதான் ஹீரோ'.. தெறிக்க விடும் நெட்டிசன்கள்!
Home > தமிழ் newsசிகிச்சைக்குப் பணம் இல்லாமல் தவித்து வந்த முன்னாள் ராணுவ வீரருக்கு கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் உதவி செய்துள்ளது அனைவரையும் நெகிழ்ச்சி அடையச்செய்துள்ளது.
1965 மற்றும் 1971 காலகட்டத்தில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரில் பங்கேற்ற பீதாம்பரன் என்ற முன்னாள் ராணுவ வீரர் சமீபத்தில் விபத்து ஒன்றில் சிக்கி காயமடைந்தார்.தனது மருத்துவ செலவிற்கு பணமில்லாமல் கஷ்டப்பட்டு வந்த அவர்,டெல்லியில் கன்னாட் பகுதியில், அரசு அலுவலகம் ஒன்றின் வளாகத்தில்,உதவி கேட்டு கையில் பதாகையுடன் காத்திருந்தார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர்,முன்னாள் ராணுவ வீரரின் நிலை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.அதோடு ராணுவ அமைச்சகத்தையும், ராணுவ செய்தி தொடர்பாளரையும் டேக் செய்திருந்தார். இதனிடையே கம்பீரின் ட்வீட்டைப் பார்த்த பாதுகாப்பு அமைச்சகம் அவருக்குப் பதிலளித்தது. அதில், `'ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மீது நீங்கள் காட்டிய அக்கறை மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் எழுப்பிய கவலைகள் நிச்சயம் தீர்க்கப்படும் என உறுதியளிக்கிறோம்'' எனக் கூறப்பட்டிருந்தது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார் கம்பீர். அதில்,''பாதுகாப்பு அமைச்சகம் பீதாம்பரனுக்கு உதவி செய்வதாக கூறியுள்ளதற்கு நன்றி. அவரின் அறுவை சிகிச்சைக்கு ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் அமைப்பு உதவி செய்ய இருக்கிறது. உடனே பதில் அளித்ததற்கு நன்றி” எனப் பதிவிட்டார். கம்பீரின் செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
Thanks @adgpi for explaining in detail how they have taken care of Mr Peethabaran. From his hip replacement surgery to a monthly grant from Rajya Sainik Board, they have assisted him like their own. Grateful. Thanks @DefenceMinIndia @SpokespersonMoD pic.twitter.com/SVG8w1FMjM
— Gautam Gambhir (@GautamGambhir) February 2, 2019