'அனைத்தும் முடிந்து விட்டது'.. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விடைபெற்ற வீரர்!

Home > தமிழ் news
By |
'அனைத்தும் முடிந்து விட்டது'.. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விடைபெற்ற வீரர்!

இது மிகக் கடினமான முடிவு. ஆனால் வேறு வழியில்லை அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டது என, தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார் கவுதம் கம்பீர்(37).

 

இந்தியாவின் மிகச் சிறப்பான ஆட்டகாரர்களில் ஒருவர். குறிப்பாக கடந்த 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் கவுதம் கம்பீர் அடித்த 97 ரன்களே இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுத்தது. இந்தியாவின் மிகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான கம்பீர் இதுவரை இந்தியாவுக்காக 242 கவுதம்  போட்டிகள் ஆடி, 10324 ரன்கள் குவித்திருக்கிறார். 

 

கொல்கத்தாவுக்காக ஐபிஎல் போட்டிகளில் 2 முறை கோப்பை வென்று கொடுத்த கம்பீர், இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் பெரிதாக ஜொலிக்கவில்லை. அதனை அவரே ஒப்புக்கொண்டு, பாதியிலேயே விலகினார்.

 

இந்த நிலையில் தனது ஓய்வு குறித்த வீடியோவில்,''இந்தாண்டு ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கியபோது நம்பிக்கையுடன் தான் இருந்தேன். ஆனால், அனைத்துப் போட்டிகளும் மோசமான அனுபவமாக முடிந்தது. அப்போதே, ‘இது முடிந்துவிட்டது கவுத்தி’ என்ற எண்ணம் எனக்குள் எழுந்துவிட்டது. இப்போது முடிவெடுத்து விட்டேன். “இது முடிந்துவிட்டது’ என்று சொல்ல வேண்டிய இடத்துக்கு வந்துவிட்டேன். கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன,'' என மிகவும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

 

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள கம்பீருக்கு கிரிக்கெட் பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

மிஸ் யூ கம்பீர்...