Watch Video: 'தனித்தனியா பிரிச்சுக் குடுங்க'.. நிவாரண உதவியிலும் ஜாதியா?
Home > தமிழ் newsகடந்த வாரம் டெல்டா மாவட்டங்களை அழித்துச்சென்ற கஜா புயலால், ஊருக்கே உணவளித்த விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து நடுத்தெருவில் நிற்கின்றனர்.
வழக்கம்போல அரசு வந்து உதவி செய்யும் வரை காத்திருக்காமல் தங்கள் கையே பிறருக்கு உதவி என, இளைஞர்கள் தொடங்கி முதியவர்கள் வரை நிவாரணப் பொருட்களை சேகரித்து நேரில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று உதவி வருகின்றனர்.
இந்த நிலையில் நிவாரண பொருட்கள் வழங்கியவர்களிடம் ஜாதி பார்த்து பிரித்துக் கொடுக்குமாறு, கோரிக்கை வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவில் நாங்க தனி கட்டிடத்துல இருக்கோம். அவங்க தனி கட்டிடத்துல இருக்காங்க எங்களுக்கு தனியா பிரிச்சுக் கொடுங்க என, ஒருசிலர் உதவிக்கு வந்தவர்களிடம் கோரிக்கை வைக்கின்றனர். பதிலுக்கு, ''கவர்ன்மெண்ட் பண்ண முடியாததை நாங்க பண்ணலாம்னு வந்திருக்கோம். இந்த நேரத்திலும் இப்படியா சாதி பாக்கிறீங்க? ஜாதிக்கொரு கட்டிடத்திலயா தங்கி இருக்கீங்க? இந்த நேரத்துலயாவது எல்லாரும் ஒத்துமையா இருங்க,'' என பொட்டில் அடித்தது போல சொல்கிறார்.
தொடர்ந்து உதவி செய்ய வந்த மற்றொருவர் இந்த நேரத்துலயும் ஜாதி பார்க்கறதா இருந்தா அதுக்கு செத்தே போயிடலாம்,'' என நறுக்கென்று சொல்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.