‘கஜா’ புயல்: பாதிப்பை காண காலதாமதமாக வந்த வட்டாட்சியர் வாகனத்தை கொளுத்திய பொதுமக்கள்?

Home > தமிழ் news
By |
‘கஜா’ புயல்: பாதிப்பை காண காலதாமதமாக வந்த வட்டாட்சியர் வாகனத்தை கொளுத்திய பொதுமக்கள்?

கஜா புயலின் தாக்கம் தமிழகத்தில் அதிக சேதத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பலரும் பார்வையிட்டு வந்தனர். 

 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் உட்பட, பலவகையிலான உதவிகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த அதிகாரிகளும் செய்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலத்தில் சேதமடைந்த பயிர்களை கணக்கிடுவதற்காக ஆலங்குடி வட்டாட்சியர் ரத்னாவதியை காலதாமதமாக ஆய்வுக்கு வந்ததாகக் கூறி, அவரை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தியதோடு அவரது வாகனத்தை எரித்ததாகவும் கூறப்படுகிறது. உண்மையில் வாகனத்தை எரித்ததாக கூறப்படுவது மக்களா, அதிகாரிகளா, அல்லது வன்முறைக்கு காரணமான ஊடுருவுவாதிகளா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.