இந்த மாவட்டங்களில் 'கனமழை' கொட்டித் தீர்க்கும்.. வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம்!

Home > தமிழ் news
By |
இந்த மாவட்டங்களில் 'கனமழை' கொட்டித் தீர்க்கும்.. வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம்!

பெயருக்கு ஏற்றாற்போல கஜா புயல் செல்லும் இடங்களை எல்லாம் ஆக்ரோஷமாகத் தாக்கி வருகிறது. தற்போதைய நிலவரப்படி கஜா புயல் திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளது.

 

இந்தநிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் கஜாவின் கோரத்தாண்டவம் குறித்து பதிவிட்டிருக்கிறார்.இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:-

 

அதிக கனமழை:-

 

திண்டுக்கல், மதுரை,புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும். கொடைக்கானலில் கனமழை கொட்டித் தீர்க்கும். காற்று கனமாக வீசும். இதனால் சுற்றுலா பயணிகள் யாரும் வெளியே வரவேண்டாம்.

 

 

கனமழை:-

 

 

திருச்சி, கரூர், ராமநாதபுரம், வால்பாறை, தூத்துக்குடி,நெல்லை, விருதுநகர், திருப்பூர் பகுதிகளுக்கு உட்பட்ட சில இடங்களில் கனமழை பெய்யும்.

 

சூறைக்காற்று:-

புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டத்தின்  வடபகுதிகள், திருச்சியின் தென் பகுதி, கரூர் மாவட்டத்தின் தென் பகுதிகள், திண்டுக்கல், மதுரையின் வடபகுதி, தேனியின் பல்வேறு பகுதிகளில் கஜா புயல் காற்றின் தாக்கம் அதிகளவில் இருக்கும்.