'அக்டோபர் 2-ம் தேதி முதல்'.. புதிய அறிவிப்பை வெளியிட்ட சத்யம் சினிமாஸ்!

Home > தமிழ் news
By |
'அக்டோபர் 2-ம் தேதி முதல்'.. புதிய அறிவிப்பை வெளியிட்ட சத்யம் சினிமாஸ்!

சென்னையின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்று சத்யம் சினிமாஸ்.சென்னை மக்களின் மனதில் சத்யம் சினிமாஸிற்கு  எப்போதுமே தனி இடம் உண்டு. இதற்குக் காரணம் அங்கு படம் பார்க்கும் அனுபவம் மட்டுமன்று,அங்கு  வரும் மக்களுக்கு செய்து அளிக்கப்படும் வசதிகளும் தான்.

 

மாற்று திறனாளிகளும்  படம் பார்த்து மகிழும் வகையில் அங்கு செய்யப்பட்டிருக்கும் வசதிகள் என  சத்யம் சினிமாஸ் ,மக்களுக்கு எப்போதுமே வாடிக்கையாளர்களின் நண்பனாக திகழ்கிறது. குறிப்பாக சத்யம்  சினிமாஸின் பாப்கானிற்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் தனது புதிய பங்களிப்பொன்றை சத்யம் சினிமாஸ் தொடங்கி  இருக்கிறது.

 

இதுகுறித்து சத்யம் சினிமாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் இங்கு விற்கப்படும் குளிர்பானங்களுக்கு 'ஸ்ட்ரா' வழங்கப்படுவதில்லை, வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டால் மட்டும் ஸ்ட்ரா வழங்கப்படும்,'' என தெரிவித்துள்ளது.பிளாஸ்டிகை ஒழிப்பதில் இது ஒரு சிறு முயற்சியாக இருக்கும் எனவும், இதன் மூலம் பசுமையான சுற்றுசூழலை உருவாக்குவோம் என்றும் சத்யம் சினிமாஸ் தெரிவித்துள்ளது.

SATHYAM CINEMAS, NO PLASTIC