‘எவ்வளவு ட்ரிக்ஸா ஏறி சவாரி செய்யுதுக.. தவளைகளை சுமந்து செல்லும் பாம்பு’.. வைரல் வீடியோ!

Home > தமிழ் news
By |
‘எவ்வளவு ட்ரிக்ஸா ஏறி சவாரி செய்யுதுக.. தவளைகளை சுமந்து செல்லும் பாம்பு’.. வைரல் வீடியோ!

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். அதுவும் மனிதர்களால் ஆன படை. பிறகு தவளைக்கெல்லாம் தனியாகவா சொல்ல வேண்டும். பாம்பைக் கண்டால் பத்தடி தாவி குதித்தோடுபவை தவளைகள். ஆனால் அத்தகைய தவளைகளுக்கு மத்தியில் பயமில்லாமல் பாம்பின் மீது சவாரி செய்யும் வீரமிக்க சில தவளைகளின் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

மேற்கு ஆஸ்திரேலியாவில் பெளல் என்பவர் தன் மனைவியுடன் ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார். சமீபத்தில் வீசிய புயல் ஒன்றில் அவரது வீட்டில் பல பொருட்கள் சேதமாகியுள்ளன. அந்த சேதங்களைக் காண சென்ற பௌலுக்கு ஒரு விநோதமான காட்சியைக் காண்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

ஆம், புயல் காரணமாக ஆயிரக்கணக்கான தவளைகள் புல் மேல் கிடந்துள்ளன. அவற்றிற்கு அருகே 3.5 மீட்டர் (68 மிமீ) நீளமுள்ள ஒரு பாம்பு வந்ததும், அதன் மேல் இந்த 10க்கும் மேற்பட்ட தவளைகளும் ஏறி, வரிசையாக அமர்ந்து, ஊர்ந்து செல்லும் பாம்பின் மீது சவாரி செல்வதைப் பார்த்து பௌல் வியப்படைந்துள்ளார்.

 

மேலும் இந்த அபூர்வ காட்சியை தன் செல்போனில் படமெடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டதுதான் தாமதம், உலகம் முழுவதும் இந்த வீடியோ வைரலானது. இதுபற்றி கூறும் இவர், இந்த வகை மலைப்பாம்புகள் ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்பு படைவீரர்கள் போல, சின்ன சின்ன ஊர்வன வகை உயிரினங்களுக்கு தெரிந்தோ தெரியாமல் உதவுகின்றன  என்கிறார். 

 

PYTHON, FROGS, VIRALVIDEOS, AUSTRALIA, BIZARRE