வீரமிகு தமிழ்நாட்டின்,தீரமிகு தமிழ்மகன்....ஜப்பானிலிருந்து ஜெயக்குமார்...சிங்கக்குட்டியுடன் கவிதை !
Home > தமிழ் news
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற 20வது சர்வதேச கடல் உணவு மற்றும் கண்காட்சியில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். இதன்பின்னர் அந்நாட்டு தொழிலதிபர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார். சென்னையில் வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ள உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டுக்கு வருமாறு, அவர்களுக்கு அமைச்சர் ஜெயகுமார் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் அங்குள்ள சஃபாரி பார்க்கிற்கு சென்ற ஜெயக்குமார் அங்குள்ள சிங்க குட்டி ஒன்றை தூக்கிவைத்து கொஞ்சினார்.மேலும் அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர் அது குறித்து கவிதை ஒன்றையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
வீரமிகு தமிழ்நாட்டின்
தீரமிகு தமிழ்மகன்
சிங்கமென வந்ததை அறிந்த -
சிங்ககுட்டி ஒன்று
தந்தையென நினைத்து
தாவி அமர்ந்தது - written by
ஜப்பானின் பியூஜி நகரிலிருந்து அமைச்சர் ஜெயக்குமார்.