'பிளான் எல்லாம் பக்காவா ரெடி'...'களத்துல சந்திப்போம்'...அதிரடி காட்டியிருக்கும் வீரர்!
Home > தமிழ் newsஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் மோதும் டி20 தொடர் பிப்ரவரி 24ம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில்,இந்தியாவிற்கு எதிரான அனைத்து உத்திகளும் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார்.
இந்திய கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியோடு,ஆஸ்திரேலியா 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் மோத உள்ளது.ஆரோன் பின்ச் தலைமையிலான மெல்பெர்ன் ரெனேகேட்ஸ் அணி,பிக்பேஷ் பட்டத்தை வென்று தெம்போடு இருக்கிறது.இது கேப்டன் ஆரோன் பின்சிற்கு மிகுந்த உற்சாகத்தை அளித்திருக்கிறது.
இதனிடையே இந்திய சுற்று பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பின்ச் ''வீரர்களை மிக கவனமுடன் செயல்படுங்கள் என அறிவுறுத்தி இருக்கிறேன்.சிறு தவறு செய்தாலும்,பின்பு அதிகமாக வருத்தப்பட வேண்டியிருக்கும்.வலிமை வாய்ந்த இந்திய அணியினை வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
சரியான திட்டமிடுதலும்,சரியான அணுகுமுறையும் இருந்தால் மட்டுமே இந்திய அணியை வீழ்த்த முடியும்.அதற்கான திட்டங்களை நாங்கள் தெளிவாக வகுத்துள்ளோம்.அது நிச்சயம் கைகொடுக்கும் என நம்புகிறோம்.இந்த முறை நிச்சயம் இந்திய அணியினை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என தெரிவித்துள்ளார்.
வரும் பிப்ரவரி 24ம் தேதி டி20 தொடரும்,ஒருநாள் தொடர் மார்ச் 2ம் தேதியும் துவங்கவுள்ளது. ஒருநாள் தொடர் ஹைத்ராபாத், நாக்பூர், ராஞ்சி, மொஹாலி மற்றும் டெல்லியில் நடக்கிறது. டி20 தொடர் விசாகப்பட்டிணம் மற்றும் பெங்களூருவில் நடைபெறுகிறது.