கார்ல மட்டும்தான் செய்யணுமா?..விமானத்தை விட்டு கீழிறங்கி 'கிகி சேலஞ்ச்' செய்த விமானி!

Home > தமிழ் news
By |
கார்ல மட்டும்தான் செய்யணுமா?..விமானத்தை விட்டு கீழிறங்கி 'கிகி சேலஞ்ச்' செய்த விமானி!

கிகி டூ யூ லவ் மீ? ஆர் யூ ரைடிங்? என்ற பாடலைப் பாடிக்கொண்டு ஓடும் காரில் இருந்து கீழறங்கி டான்ஸ் ஆடவேண்டும் என்பதுதான் கிகி சேலஞ்ச். இதனை கார் மற்றும் பைக்குகளில் இளைஞர்கள் செய்ய ஆரம்பிக்க, போலீஸ் இதனை செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.இதன் காரணமாக விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.

 

இந்தநிலையில் காரில் இருந்து மட்டும்தான் கிகி சேலஞ்ச் செய்ய வேண்டுமா? விமானத்தில் இருந்து கீழிறங்கி கிகி சேலஞ்ச் செய்ய முடியாதா? என, பெண் விமானி ஒருவர் களத்தில் இறங்கி விட்டார்.

 

அலெஜாண்ட்ரா என்ற அந்த பெண் விமானியும்,துணை விமானியும் விமானத்தை இயக்கி விட்டு கீழிறங்கி ஆடுகின்றனர். இதனை ஒருவர் படம்பிடிக்க, விமானம் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் இயங்குகிறது.நல்ல வேளையாக விமானம் எந்த விபத்திலும் சிக்கவில்லை.

 

இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

FLIGHT, KIKICHALLENGE