Looks like you've blocked notifications!

லெவி என்ற இளைஞர், தனது தோழியான ஆலிசனிடம் தன் காதலை வெளிப்படுத்த திட்டம் போட்டுள்ளார்.

 

ஏற்கனவே, இருவரின் குடும்பமும் நன்கு பரிட்சயமானவர்கள் என்பதால், அவர்களுடைய குடும்பத்தார்களிடம் தன்னுடைய விருப்பத்தை கூறிவிட்டு, ஆலிசனை ஒரு பயணத்திற்காக அழைத்து சென்றுள்ளார்.

 

திட்டமிட்டபடி, வாகனத்தில் இருந்து இறங்கிய லெவி, ஆலிசன் முன்பு மண்டியிட்டு தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

 

லெவியின் காதலை பார்த்து மகிழ்ச்சியில் ஆலிசன் திளைத்து கொண்டிருந்தபோது, அங்கே மறைந்து இருந்த ஆலிசனின் தந்தை ஜேக், 'நிராகரித்து விடு' என எழுதப்பட்ட பலகையை குறும்புத்தனமாக ஆலிசனை நோக்கிக் காண்பித்துள்ளார்.

 

இறுதியில், லெவியின் காதலை ஏற்றுக்கொண்ட ஆலிசன், "என் தந்தைக்கு லெவியை ரொம்ப பிடிக்கும். அவர் எப்போதுமே இந்த மாதிரி குறும்புத்தனங்களை செய்பவர்தான்,'' என இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

 

ஜேக் தனது மகளிடம் லெவியை நிராகரிக்குமாறு பலகையில் எழுதிக் காண்பித்த புகைப்படம், சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

BY SATHEESH | MAR 31, 2018 11:55 PM #LOVEPROPOSAL #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS