Alaya BNS Banner
Kayamkulam Kochunni BNS Banner
Aan Devadhai BNS Banner

"ஆமாம் பல லட்சம் பேரின் தகவல்களை திருடிட்டாங்க"...மார்க் சக்கர்பெர்க்!

Home > தமிழ் news
By |
"ஆமாம் பல லட்சம் பேரின் தகவல்களை திருடிட்டாங்க"...மார்க் சக்கர்பெர்க்!

சில நாட்களுக்கு முன்பு கூகுள் நிறுவனம், அதன் கூகுள் ப்ளஸ் தளத்திலிருந்து 5 லட்சம் கணக்குகளின் தரவுகள் திருடப்பட்டுள்ளதாக கூறி அதிர்ச்சி அளித்தது.தற்போது அதே போல் ஒரு அதிர்ச்சி தகவலை  பேஸ்புக் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

 

பேஸ்புக்கை பயன்படுத்தும் 9 கோடி பயனர்களின் கணக்குகளின் தரவுகளை, அடையாளம் தெரியாத நபர்கள் ஹேக் செய்துள்ளனர் என்னும் அதிர்ச்சி தகவலை அந்நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க் சென்ற மாதம்  தெரிவித்திருந்தார்.இந்நிலையில், அப்படி ஹேக் செய்யப்பட்டதில் 2.9 கோடி கணக்குகளின் தரவுகள் திருடப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் தற்போது அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளது.

 

ஒரு புதிய பக்-ஐ ஹேக்கர்கள் உருவாக்கியதன் மூலம், 1.5 கோடி பயனர்களின் பெயர், போன் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை திருடியுள்ளனர். இதுவல்லாமல், 1.4 கோடி பயனர்களின் கணக்குகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் வசித்து வரும் இடம், பிறந்த தேதி உள்ளிட்ட மிகவும் சென்சிட்டிவ் தகவல்களை ஹேக்கர்கள் திருடியுள்ளனர்’ என்று பேஸ்புக் விளக்கம் அளித்துள்ளது.

 

பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்தி, பல ஆப்களில் லாக்-இன் செய்ய முடியும். அப்படி செய்யும் போது, இந்த ஹேக் நடந்துள்ளதா என்ற கோணத்திலும், இவ்விவகாரம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஃபேஸ்புக்கின் மற்ற சேவைகளான வாட்ஸ்அப், இன்ஸ்டகிராம், மெஸெஞ்சர் போன்ற தளங்கள், இந்த ஹேக்கால் பாதிப்பு அடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் டெக் நிறுவனங்கள் மீதான அழுத்தம் தற்போது அதிகமாகியுள்ளது. இந்த பிரச்சனைகளை சரி செய்ய அமெரிக்கா, விரைவில் ஒரு சட்டம் கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FACEBOOK, MARK ZUCKERBERG, HACKERS