களை கட்டும் 2019 தேர்தல்: அதிரடி மாற்றங்களுடன் வரும் பேஸ்புக்!

Home > தமிழ் news
By |
களை கட்டும் 2019 தேர்தல்: அதிரடி மாற்றங்களுடன் வரும் பேஸ்புக்!

இந்தியாவில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, முறையான விளம்பரம் மற்றும் பிரச்சாரத்துக்கான ஒப்புதல் மற்றும் உரிமம் பெற்று, பேஸ்புக்கிலேயே விளம்பரம் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.


அதுமட்டுமல்லாமல், அரசியல் விளம்பரங்களை பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூக தளங்களில் பரப்புரை செய்வதற்கான சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி,  விளம்பரம் மற்றும் பிரச்சாரக் கருத்துக்களை பரப்பும் விருப்பமுள்ள அரசியலாளர்கள், தங்களது அடையாளச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று உள்ளிட்டவற்றை முன்கூட்டியே பதிவிட வேண்டுமாம்.


இதனால், அரசியல்வாதிகள் விளம்பரத்துக்காக செலவு செய்யும் குறிப்பிட்ட தொகை விபரங்களின் கணக்குகளை தேர்தல் ஆணையம் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அறிந்துகொள்ள முடியும். மேலும் அந்த விளம்பரங்களை எவ்வளவு பேர் பார்க்கிறார்கள் என்கிற தகவலை விளம்பரதாரர்களும் அறிந்துகொள்ள முடியும் என்பதால் இத்தகைய புதிய வசதிகளை பேஸ்புக் வழங்கியுள்ளது.

2019POLLS, ELECTION, FACEBOOK, BIGCHANGES, MAKESNEW, INDIA, ECI