BGM BNS Banner

வாகன செலவு அதிகமாகியதால் கேள்வி கேட்ட அரசு; ராஜினாமா செய்த அதிகாரி!

Home > தமிழ் news
By |
வாகன செலவு அதிகமாகியதால் கேள்வி கேட்ட அரசு; ராஜினாமா செய்த அதிகாரி!

யுனைட்டடு நேஷன்ஸின் மிக முக்கியமான சூழலியல் உயர் அதிகாரி எரிக் சோலியம் நார்சே சூழலியல் துறையின் முன்னாள் அமைச்சராக பொறுப்பு வகித்தவர். பொதுவாக நம்மூர் அரசு அதிகாரிகள் தொடங்கி உலகம் முழுவதும் அரசு அதிகாரிகளுக்கு அவரவர் பொறுப்புக்கேற்ப வாகனங்கள் கொடுக்கப்படுவது வழமையான ஒன்றுதான். 

 

எரிக் சோலியத்துக்கும் அப்படி அரசு வாகனங்கள் அளிக்கப்பட்டன. ஆனால் சுழலியல் அதிகாரியான எரிக், அதிகப்படியான சூழலியல் அக்கறை கொண்ட பூவுலகின் நண்பராக இருந்துள்ளார். 

 

அதனால் அரசு கொடுத்த வாகனங்களை பயன்படுத்தாமல், கார்பன் புகைமண்டலத்துக்கு ஆட்படாத வாகனங்களையும், விமானங்களையும் பயன்படுத்தியுள்ளார். இதனால் அரசுக்கு ஏறத்தாழ 500 மில்லியன் டாலர்கள் செலவாகியுள்ளன. இதனால் அரச கருவூலத்தில் பொருளாதார நெருக்கடி உண்டானதால் அதிருப்தி அடைந்த அரசு ஆடிட்டிங்கில் அவரிடத்தில் முறையான கணக்குகளை சமர்ப்பிக்கச் சொல்லி வற்புறுத்தி, இதனை கண்டித்துமுள்ளது. 

 

இதில் அதிருப்தி அடைந்த சூழலியல் உயர் அதிகாரி எரிக் தன் பதவியை ராஜினாமா  செய்துள்ளார். எனினும்  இதுகுறித்த மேற்கொண்ட அறிவிப்பு அரசிடம் இருந்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

UN, US, ERIK SOLHEIM, ENVIRONMENT CHIEF, CARBON EMISSIONS