‘77 ரன்களில்’ ஆல் அவுட்..அதிகபட்ச ரன் 17-தான்.. சொந்த மண்ணில் வெச்சு செஞ்ச வெஸ்ட் இண்டீஸ்!

Home > தமிழ் news
By |

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி ஜெயித்த பின்பு நியூஸிலாந்து சென்றுள்ளது இந்திய அணி.  இதேபோல் பல நாடுகளின் கிரிக்கெட் அணிகளும் வெவ்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றன.

‘77 ரன்களில்’ ஆல் அவுட்..அதிகபட்ச ரன் 17-தான்.. சொந்த மண்ணில் வெச்சு செஞ்ச வெஸ்ட் இண்டீஸ்!

அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவரும் இங்கிலாந்து அணி, அங்கு 3 டெஸ்ட், 5 ஒரு நாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது.  வெஸ்ட் இண்டீஸின் புகழ்பெற்ற பிரிட்ஜ்டவுன் நகரில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில்தான் வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்துடன் மோதும் முதல் டெஸ்ட் போட்டி புதன் கிழமை அன்று தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ், பேட்டிங்கை தேர்வு செய்து 289 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. இதில் ஹெட்மெயர் 81 ரன்கள் எடுத்தார்.  இங்கிலாந்தை பொறுத்தவரை சிறப்பான ஃபீல்டிங்கை கையாண்டதோடு, தரமான பௌலர்களை களமிறக்கி விக்கெட்டுகளை கைப்பற்றியது.

அதிலும் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தன்னால் முடிந்த அளவுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த தருணம் வரை இங்கிலாந்துக்கு இருந்த நம்பிக்கை முதல் இன்னிங்ஸ் தொடங்கியபோதும் நீடித்திருந்தது. ஆனால் பேட்டிங் செய்யத் தொடங்கிய இங்கிலாந்து அணியினை, ஆட்டத்தின் தொடக்கம் முதலே, கட்டம் கட்டியது வெஸ்ட் இண்டீஸ்.

வலுவான ஃபீல்டிங்கால் ஒரு முடிவோடு இருந்த வெஸ்ட் இண்டீஸ், 77 ரன்களில் இங்கிலாந்து அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் சுருட்டியுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக கீமர் ரோச் 5 விக்கெட்டுகளையும், ஹோல்டர் மற்றும் ஜோசப் ஒவ்வொருவரும் ஆளுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதிலும் இங்கிலாந்து அணியின் ஒரு தனி பேட்ஸ்மேனால் 17 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. மற்றவர்கள் எடுத்த ரன்கள் அதற்கு கீழேதான்.  இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். எனினும் அடுத்த இன்னிங்ஸ் தொடங்கியுள்ளது.

WIVENG, ICC, KEMAR ROACH