'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான அபர்ணதி, வசந்தபாலன் இயக்கும் அடுத்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 

இப்படத்திற்கான பூஜை நாளை காலை சென்னை புறநகர் பகுதி ஒன்றில் நடைபெறுகிறது. ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருடன் இணைந்து ராதிகா சரத்குமார், 'பசங்க' பாண்டி, 'பாகுபலி' புகழ் பிரபாகர் ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.

 

வசந்தபாலன் இயக்கிய 'வெயில்' படத்தின் வாயிலாக, ஜி.வி.பிரகாஷ் தனது இசையமைப்பாளர் பயணத்தைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

BY BEHINDWOODS NEWS BUREAU | MAY 24, 2018 4:22 PM #ABARNATHI #GVPRAKASH #ENGAVEETUMAPILLAI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS