ஆதார் அட்டையால் சிக்கல்.. ’தற்கொலை மிரட்டல்’விடுத்த மின்வாரிய ஊழியர்!
Home > தமிழ் news
ஒடிசாவின் மயுர்பாஞ்ஜ் மாவட்டத்திற்குட்பட்ட பரிபாடா நகரத்தை சேர்ந்த பொது மின்சார வாரிய ஊழியர் சந்தோஷ் ஜெனா. குறைவான சம்பளத்தால் கஷ்டப்படும் இவர், தான் வேலை செய்யும் மின்வாரியத்தின் கீழ் தன் சம்பளத்தில் பிடித்தம் செய்த பணியாளர் வைப்பு நலன் நிதி எனப்படும் புரோவிடண்ட் ஃபண்டினை பெற முயற்சித்திருக்கிறார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவருடைய ஆதார் அட்டையில் சில விபரங்கள் குளறுபடியால் மாறியுள்ளன. இவ்விதமான விபரக் கோளாறுகளுடன் ஆதார் அட்டை இருப்பதால் அவருடைய பணியாளர் வைப்பு நிதியினை அவருக்கு அளிக்கும் பணியில் இழுபறி எற்பட்டதில் அதிருப்தியானார் சந்தோஷ் ஜெனா.
உடனே சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவகலம் சென்று , தன் ஆதார் அட்டையில் இருக்கும் சிறுசிறு விபரங்களில் நிகழ்ந்துள்ள தவறுகளை திருத்தம் செய்யாவிடின் தனது வைப்பு நிதி கிடைப்பதில் தாமதமாகிறது என்றும், ஆனால் அந்த விபரங்களை சரி செய்வது என்பது சாதாராண விஷயமல்ல, ஓரிரு நாட்களில் நடக்கக் கூடியதல்ல என்பதால், தனக்கு வரவேண்டிய பணியாளர் வைப்பு நிதியை பெற்றுத்தராவிடின் தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் தெரிவித்து அதிர்ச்சியளித்துள்ளார்.