இறப்பதற்கு முன் ஐன்ஸ்டீன் எழுதிய ’கடவுள்’ பற்றிய கடிதம் 11 கோடிக்கு ஏலம்!
Home > தமிழ் newsதத்துவவியலாளர், அறிவியல் மேதை என்றெல்லாம் அறியபடும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கையால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றினை, Christie’s எனும் நிறுவனம் சுமார் 11 கோடி ரூபாய்க்கு ஏலம் விடுகிறது.
இயக்க சக்தியின் சமன்பாட்டை வரையறுத்த ஐன்ஸ்டீன், தான் இறக்கப் போகும் ஒரு வருடத்துக்கு முன்னர், எரிக் கிட்கிந்த் எனும் ஜெர்மனி தத்துவவியல் அறிஞருக்கு ஜெர்மனி மொழியில் எழுதிய அந்த ஒன்றரை பக்க கடிதத்தில், உலகின் இயக்கம், பிரபஞ்சத்தின் சக்திக் கோட்பாடு, கடவுள் நிலை, மதம் உள்ளிட்டவற்றை பற்றிய தன் உள்ளார்ந்த பார்வைகளையும், அவை தொடர்பான கண்டுபிடிப்புகளையும் விவரித்துள்ளார்.
கடந்த பத்து வருடங்களுக்கு முன்பாக இதே கடிதத்தை இதே நிறுவனம் சுமார் 2 கோடி ரூபாய்க்கும், 1939-ல் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் கடந்த 2002-ல் 14 கோடிக்கும் ஏலம் விடப்பட்டது. இந்நிலையில், வரும் டிசம்பர் 4-ம் தேதி Christie’s நிறுவனம் இந்த அரிய கடிதத்தை ஏலம் விட இருக்கிறது.